நான் வர்மம் பேசுகிறேன்- பகுதி 3
- Compiled By மரு.அ.முருகேசன், மரு மு யோகானந்த்
- Feb 23, 2019
- 1 min read
அரி ஓம் குருவே துணை
தேவசேணாதிபதி தமிழ் கடவுள் முருகனிடமிருந்து என்னைப் பற்றிய அறிவு அகத்தியருக்குச் சென்ற வரலாறு.

‘’நெஞ்சடை அரனார்பெற்ற செல்வனாங்குழந்தை வேலன் நெஞ்சினில் மகிழ்ச்சிகொண்டு நினவுடனகத் தீசருக்கு மிஞ்சவே உபதேசித்த வெற்றியாய்ந்த தட்டுவர்மம்’’
தட்டுவர்ம நிதானம்.
முருகன் என்னைப்பற்றிய (வர்மத்தின்) இரகசியத்தை மிக்க மனமகிழ்வோடு அகத்தியருக்கு உபதேசித்தார். அகத்தியர் மூலம் பல சித்தர் பெருமக்கள் கற்றறிந்தனர்.
வேளி மலையில் அகத்தியர் வர்மம் கற்றது பற்றிய பதிவு
தெட்சணாமூர்தி காவியம் (778-780/1000)
“நிலைக்கலாம் ஆதியிலே மைந்தா கேளு
நிலையான வேளிமலைக்கு ஆகும் போது
மலைதுருவ மத்தியிலே குகைதானுண்டு
மார்க்கமுடன் அதிலொரு பெரியோர்தானும்
கலைக்கு அதிகமான சில நூல்கள் பேசி
கருணையுடன் இருக்கையிலே சென்றேன் யானும்
சிலைக்கதிகம் அகத்தீசா வாவென்றே தான்
தீர்க்க்கமுடன் உபசரித்து யிருஎன்றாரெ”
‘இருவென்று அமிரதரசம் கொள்ளும் போது
இன்பமுடன் சிலம்பிருக்கும் வகையைச் சொல்லி
கருவென்றபட்சியுட வீச்சம் காட்டி
கால் பலமும் புஜ பலமும் நரம்பும் சொல்லி
திருவென்ற மந்திரத்தின் தீர்க்கம் சொல்லி
சிவ கயில பொதிகயில் போயிரு என்றார்கள்
குருவென்ற பொதிகையிலே யிருந்து கொண்டு
குருவான குருவெடுத்து ஆடினேனே.
ஆடினேன் அதன்பிறகு கோடாகோடி
அளவற்ற வித்தையெல்லாம் ஆடிக்கொண்டு
நாடினேன் சுழிமுனையில் நாட்டம் கொண்டு
நாதாந்த மனோன்மணியை கண்டுதேறி
பாடினேன் வெகு கோடி சாத்திரங்கள்
பக்தியுடன் கருக்கிடைகள் நன்றாய் தோண
தேடினேன் மலை கெட்வு குகைகள் தேடிச்
சென்று திறம்பெற்று மனம் நிலைத்தேன் பாரே’
தெட்சணாமூர்த்தி காவியம் 1000

இந்த பாடலின் மூலம் அகத்தியர் என்னை (வர்மம்) கற்ற வரலாற்றை அறிந்தோம். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வேளிமலையில் முருகன் கோவில் உள்ளது. ஆகையால் அகத்தியருக்கு முருக பெருமான் என்னைப் பற்றியும் (வர்மக்கலை) , ஏனைய சாத்திரங்களை இங்கே கற்றுக்கொடுத்திருக்கலாம் என்பது தின்மம். அடுத்த இதழில் புராண இதிகாச காலங்களில் என்னைப் (வர்ம தற்காப்புக்கலை) பயன்படுத்தியமைக்கான சில ஆதாரங்களைக் காணலாம்.
சத்யா கிளினிக்,
352 பி.ஜி அவென்யூ முதல்தெரு விரிவாக்கம்,காட்டுப்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா - 600 056கைபேசி எண்: +91 98431 18402, +91 63811 89796,+91 86955 45234
Email: sathyapolyclinic@gmail.com
Web: http://sathyapolyclinic.wix.com/ayush
http://sathyaclinic.tk
Facebook pages: Sathya Clinic, Maayon PAIN Relief Clinic
Comments