நான் வர்மம் பேசுகிறேன்- பகுதி ஒன்று
அரி ஓம் குருவே துணை

வர்மக்கலையான நான் தமிழகத்துக்கே சொந்தமான பொக்கிசம். நம் சித்தர் பெருமக்களால் மனித இனம் உய்யும் பொருட்டு ஆக்கி அளிக்கப்பட்ட பல்வேறு கலைகளில் நானும் ஒருவன். ஒரு காலத்தில் குருபரம்பரையாக, குடும்பக் கலையாக வழி வழியாக வந்த நான் இப்போது வர்மம் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு வந்துவிட்டேன்.

பழங்காலத்தில் சிறந்து விளங்க்கிய நான் இப்பொழுது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டேன், தமிழரால் தோற்றுவிக்கப்பட்டு தமிழரிடையே உன்னத நிலையில் இருந்த நான், தமிழரால் உலகின் பல நாடுகளுக்கும் பரப்பப்பட்டேன். அந்நாடுகளில் இன்றும் வழக்கிலுள்ளேன். ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை அவ்வாறன்று. சீனாவில் குங்பூ, திம்மாக், ஜப்பானில் அக்கிடோ போன்ற தற்காப்புக் கலைகளும் சீன அக்குபஞ்சர் போன்ற மருத்துவக் கலைகளும் வர்மமாகிய எனது திரிந்த வடிவமே .
வர்மம் என்ற வார்த்தையானது உங்களுக்கு இந்தியன், ஏழாம் அறிவு போன்ற தமிழ் திரைப்படங்களின் வாயிலாக சிறிது பரிட்சயமானது. இதன் பின்புதான் போதிதர்மர் நமது பல்லவ நாட்டு இளவரசர் என்பதனை அறிந்தீர்கள். இவர் வாயிலாகதான் புத்த மதமும் நானும் எனது இரு வடிவங்களும் (தற்காப்புக்கலை மற்றும் மருத்துவம்) சீனாவை அடைந்தோம். இவ்வாறான காலச் சூழலில் வர்மமாகிய எமது தனித்துவத்தையும் அடையாலத்தையும் அறிந்துகொள்ள வேண்டிய சூழநிலையில் உள்ளீர்கள்.

முதலில் வர்மமாகிய நான் யார் என்பதைக் காண்போம்.
நான் உடலில் உயிர் சக்தி (ப்ராணசக்தி) உறைந்துள்ள இடம் ஆவேன். நான் உறைந்துள்ள இந்த புள்ளிகள் வர்மப்புள்ளிகள் என்றழைக்கப்படுகின்றது. இதுவே கி(QI),சி(CHI),ப்ராணா என பல்வேறு பெயர்களில் வழக்கில் உள்ளது.
“உடலுயிர் நாடி தன்னில் உந்திடும் வாசியதாம்
ஊனுடல் மருவியே ஊடாடும் நிலையே வர்மம்”
என்கிறது வர்மசார நூல்.
அதாவது மனித உடலில் உள்ள எலும்பு, தசை, நரம்பு, ஆகியவை சந்திக்கும் இடங்கள் உயி்ர்நிலையின் இருப்பிடமாக உள்ள இடங்கள் நான் (வர்மம்)ஆவேன். இந்தப்புள்ளிகள் மற்றும் அதன் அமைவிடங்களை பற்றிய ஞானத்தை கருவாகக் கொண்டு விளங்கும் ஒரு மருத்துவ மற்றும் தற்காப்புக் கலையாவேன். இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த மருத்துவச் சாத்திரமாகவும் திகள்கி்ன்றேன்.
எனது (வர்ம) இடங்களின் அறிவைக் கொண்டு மனித குலத்தின் நண்மைக்கான கலையே நம் வர்மக்கலை. ‘உயிர்க்காப்பு’ என்பதே எனது (வர்மத்தின்) கரு. இதனால் தான் நான் மிகவும் மறைபொருளாக பயிற்றுவிக்கப்பட்டேன். இக்காரணாத்தினாளோ என்னவோ நான் மறைந்துவிட்டேன். என்னைக் கற்க 12 வருடங்கள் சீடனாக இருக்கவேண்டியதிருந்தது. குருவிற்கு நம்பிக்கை ஏற்பட்ட பின்பு தான் கற்றுத்தரப்பட்டது.
என்னை பற்றிய விழிப்புணர்ச்சி தொடரும்….
மரு.அ.முருகேசன், மரு.மு.யோகானந்த், மரு.மு.சத்யபாமா
சத்யா கிளினிக்,
352 பி.ஜி அவென்யூ முதல்தெரு விரிவாக்கம்,
காட்டுப்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா - 600 056
கைபேசி எண்: +91 98431 18402, +91 63811 89796,+91 86955 45234
Email: sathyapolyclinic@gmail.com Web: http://sathyapolyclinic.wix.com/ayush
Facebook pages: Sathya Clinic, Maayon PAIN Relief Clinic