பிரசவத்திற்கு பின் பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய உணவுமுறைகள் - இயற்கை மருத்துவம்
- Dr A Murugesan,Dr M Yoganand
- Jul 4, 2017
- 1 min read
பிரசவத்திற்கு பின் பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய உணவுமுறைகள் - இயற்கை மருத்துவம்
பெண்களூக்கு பொதுவாக சுகபிரசவம் அல்லது சிசேரியனில் இரத்த இழப்பு அதிகமாக இருக்கும். இதை ஈடு செய்ய வேண்டும். பிரசவத்திற்கு பின்னும் சத்துள்ள உணவை உட்கொள்வதும், பிரசவத்திற்கு பின் உடலை நன்கு பராமரிக்க வேண்டும். அவசியமாகும்.
கீரைகள், பேரிச்சபழம், கேழ்வரகு, கம்பு, கறிவேப்பில்லை பொடி, போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். தினம் ஒரு கீரை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு தாய் பால் மட்டும் உணவு என்பதால், தாய்மார்கள் தங்கள் உணவுகளில் தனி கவனும் செலுத்த வேண்டும். இதனால் குழந்தையும் நல்ல வளர்ச்சியுடன் இருக்கும். கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவில் புரதசத்து, நார்சத்து, இரும்பு சத்து, மற்றும் கால்சியம் சத்து இருக்க வேண்டும்.
குழந்தைக்கு பால் கொடுப்பதால் அதிகமாக உணவில் புரதம் மற்றும் கால்சியம் சேர்த்து கொள்ள வேண்டும். பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், நண்டு, இறால், சோளம் போன்ற கால்சியம் சத்து அதிகம் கொண்ட உணவுகளை உன்ன வேண்டும். பாதம், பிஸ்தா, அக்ரூட், பச்சை வேர் கடலை, மீன், முட்டை போன்ற புரத சத்து அதிகம் உள்ள உணவுகளை உன்ன வேண்டும் இதனால் பால் நன்றாக சுரக்கும்.
அதிக கொழுப்பு உள்ள உணவு, கிழங்கு வகைகள் மற்றும் தேங்காய் போன்ற உணவுகளை பிரசவம் ஆன பின் ஒரு மாத காலத்திற்கு தவிர்க்க வேண்டும். இதை சாப்பிடுவதால் வாயு, மலச்சிக்கல், அஜீரண கோளறு ஏற்படும்.
SATHYA CLINIC,
51/2 CHENDURPURAM MAIN ROAD,
KATUPAKKAM,CHENNAI-600056
Recent Posts
See Allவெள்ளைப்படுதல் நோய்.! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு! பெண்களின் பிறப்புறுப்பின் வழியே வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல்...
மாதவிலக்கும் சித்தர்கள் அருளிய தீர்வுகளும் !!! (இது பெண்களுக்கான பதிவு) மாதவிலக்கின் போது வெளியேறும் குருதி கலந்த கழிவினையே "சூதகம்"...
Comments